நாளைய ஊடகம்; மட்டக்களப்பில் பயிற்சிப் பட்டறை

காட்சி ஊடகம், செய்தித்துறை, அறிவிப்பு தொடர்பான ஒருநாள் செயன்முறைப் பயிற்சிப் பட்டறையொன்று நாளை(13)  கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெறவுள்ளது.

இதனை ஊடகம் மற்றும் ஆய்வுக்கான கல்லூரி, சிறகுநுனி என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

தேசிய ஊடகக் கல்லூரி மற்றும் தேசிய ஊடகங்களைச் சேர்ந்த பயிற்றுனர்கள் இந்நிகழ்வில் வளவாளர்களாகப் பங்கேற்கவுள்ளனர்.

காலை 9.00 முதல் மாலை 4.00 வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஆர்வமிக்க 16 – 35 வயதுக்குட்பட்டவர்கள் கலந்து கொள்ள முடியும். முற்றிலும் இலவசமான இத் தமிழ்மொழி மூல செயன்முறைப் பயிற்சியில் பங்குபற்ற விரும்புவோர் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், அடையாள அட்டை இலக்கம் ஆகிய விபரங்களை குறுஞ்செய்தியாக (0764 475 375) அல்லது மின்னஞ்சலாக (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.) எதிர்வரும் மே 12ம் திகதிக்கு முன் அனுப்பி தம்மைப் பதிவு செய்து கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.சுமார் 40அடி உயரமான வழுக்குமரத்தில் தனது கோஸ்ட்டியுடன் ஏறிய சாமித்தம்பி தவராசா(வயது 40) என்பவரே இவ்விதம் பரிதாபகரமாக மல்லாக்க வீழந்தார்.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.