அறிவித்தல்கள்

கொக்கட்டிச்சோலை சிவன் கோயில் வருடாந்த மகோற்சவ தேரோட்ட பெருவிழா

கிழக்கிலங்கையின் பூர்வீக வரலாற்று காலம் தொட்டுதேரோடும் ஒரே ஆலயமும் இரண்டாயிரத்து அறுநூறுவருடங்கள் பழைமைவாய்ந்த தானாக தோன்றியசிவலிங்கம் அருள் பாலிக்கும் மட்டக்களப்பு மாவட்டம்

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய உற்வசம் இன்று ஆரம்பம்

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்தி பெருவிழா இன்று 14.08.2018 செவ்வாய்க்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிறது. உற்சவ காலத்தில் அதிகாலை மதியம் மாலை விசேட பூசைகள் தினமும் நடைபெறும்.

புகைப்படத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கான ஒன்று கூடலும் அனுபவப் பகிர்வு நிகழ்வும்

அபே போட்டோகிராபர்ஸ் கழகத்தினரின் ஏற்பாட்டில் புகைப்படத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கான ஒன்று கூடலும் அனுபவப் பகிர்வு நிகழ்வும் எதிர் வரும் 29-07-2018 அன்று காலை 6.45 க்கு ஒலுவில் வெளிச்ச வீட்டில் நிகழவிருக்கின்றது.

சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 67வது குருபூசையை முன்னிட்டு மாபெரும் சித்தர் ரத பவனி ஊர்வலம்

பன்னெடுங் காலமாக ஈழமணித் திருநாடெங்கும் நடமாடி பல சித்துக்கள் புரிந்து காரைதீவு பதியில் ஜீவ சமாதி அடைந்த ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் ரத பவனி ஊர்வலமானது 06.06.2018 (வெள்ளிக் கிழமை) அன்று

சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்களின் ‘ஆற்றல்-2018’ அறிவியல் கண்காட்சிக்கான அழைப்பு

மட்டுநகர் சிவானந்தா தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவும் சிவாநந்தாபழைய மாணவர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “ஆற்றல்-2018” கல்விக் கண்காட்சி எதிர்வரும் 2ம் மற்றும் 3ம் திகதிகளில்

கும்பாபிஷேக பாடல்கள் மற்றும் கந்தன் காவியம் அடங்கிய இரண்டு இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு அழைப்பிதழ்

கிழக்கிலங்கை திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகமானது எதிர்வரும் 2018.06.25 திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

குருமண்வெளி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த சங்காபிஷேகம் நிகழ்வு

குருமண்வெளி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த 1008 சங்காபிஷேகமும், பாற்குடபவனியும் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆலயபிரமதகுரு சிவஸ்ரீ வே.குபேந்திரன்குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்

கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் 2000 வருடங்கள் பழைமை வாய்ந்த திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிசேக நிகழ்வானது 15 வருடங்களின்பின் எதிர்வரும் 25.06.2018இல் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலய வருடாந்த மஹோற்சவ திருவிழா

கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலய வருடாந்த பெருவிழா நேற்று வெள்ளிக்கிழமை(15.6.2018) ஆரம்பமாகி எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறும் தீர்த்தோற்சவத்துடன் வருடாந்த மஹோற்சவ விழா நிறைவுபெறவுள்ளது.

வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க மட்டு / அம்பாறை - வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 11.06.2018 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

விளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளி அம்பாளுக்கு 1008 சங்காபிஷேகம்

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய கும்பாபிஷேக தின மணவாளக் கோல உற்சவ (1008) சங்காபிஷேக விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா - 2018

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா எதிர்வரும் 19.06.2018 செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி 26.06.2018 புதன்கிழமை இனிதே நிறைவடையவுள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி அறவீடு தொடர்பான தெளிவுபடுத்தும் செயலமர்வு

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி அறவீடு தொடர்பான தெளிவுபடுத்தும் செயலமர்வு, மட்டக்களப்பு பிராந்திய பணிமனையில், நாளை (05) மாலை 4.30 மணி தொடக்கம் 6 மணிவரை நடைபெறவுள்ளது.

பனையறுப்பான் ஸ்ரீ நவசக்தி விநாயகர் பத்திரகாளி அம்மன் வருடாந்த சடங்கு உற்சவம் -2018

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குற்பட்ட பனையறுப்பான் அருள்மிகு ஸ்ரீ நவசக்தி விநாயகர் பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் எதிர்வரும் 10/06/2018 (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகி  13/06/2018 (புதன்கிழமை) தீர்தோற்சவத்துடன் இனிதே நிறைவடையவுள்ளது.

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் ஆலய மஹா சங்காபிஷேக விஞ்ஞாபனம் - 2018

சீர்பாததேவி என்னும் மாதரசியினால் உருவாக்கப்பட்ட வரலாற்றுக் சிறப்பு மிக்கதான அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருசாபிஷேக, சங்காபிஷேகம் எதிர்வரும் 05.06.2018 செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.

அதிகம் வாசித்தவை

 • Aug 13 , 2017

  அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 • Apr 16 , 2018

  விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

 • Apr 25 , 2018

  12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

 • Apr 18 , 2018

  2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

 • May 12 , 2018

  இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.