வெல்லாவெளி பிரதேசத்தில் பிறந்த குழந்தையை நாய் இழுத்து சென்ற ......... - கிழக்குநியூஸ்.கொம்

Breaking

Home Top Ad

பிறந்ததின, திருமண, மற்றும் மரண அறிவித்தல்களை இலவசமாக எமது இணையத்தில் பிரசுரிக்கவுள்ளோம். பிரசுரிக்க விரும்புவர்கள் தங்கள் அறிவித்தல்களை info@kilakkunews.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.

Post Top Ad

பிறந்ததின, திருமண, மற்றும் மரண அறிவித்தல்களை இலவசமாக எமது இணையத்தில் பிரசுரிக்கவுள்ளோம். பிரசுரிக்க விரும்புவர்கள் தங்கள் அறிவித்தல்களை info@kilakkunews.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.

Tuesday, May 12, 2020

வெல்லாவெளி பிரதேசத்தில் பிறந்த குழந்தையை நாய் இழுத்து சென்ற .........
 மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் ஆணைக்கட்டு பிரதேசத்தில் தாகாத முறையில் பிரசவித்த பெண் சிசு ஓன்றை வீட்டின் வளவி
ல்    கைவிட்ட  சென்ற சிசுவை நாய் இழுத்துச் சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன்  அந்த குழந்தையை பிரசவித்த  4 பிள்ளைகளின் தாய் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) மாலை கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர். 
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய 21, 17, 14, 11 வயதுகளுடைய 4 பிள்ளைகளின் தயாரான குறித்த பெண்ணின் கணவர் கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்னர் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண் 14 ம் கொலனியைச் சோந்த ஒருவருடன் கள்ள தொடர்பு வைத்திருந்த நிலையில் பெண் கர்ப்பம் தரித்துள்ளாதகவும் அதற்கான உடலில் எந்தவிதமான  தோற்றப்பாடு காணப்படாத  நிலையில் சம்பவதினமான சனிக்கிழமை (09)   காலை 9 மணியளவில் வீட்டின் வளவின் 300 மீற்றர் தூரம் கொண்ட பகுதியில் யாருக்கும் தெரியாமல் பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். 
இதனையடுத்து குறித்த பெண்ணின் கள்ளக் காதலனுக்கு தனக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும் அதனை எடுத்துச் செல்லுமாறு கையடக்க தொலைபேசியில் தெரிவித்துவிட்டு அங்கு இரவு 7 மணிவரை காத்திருந்துள்ளார். ஆனால் கள்ளக் காதலனே வராத நிலையில் தனது  பிள்ளைகளுக்கு இந்த சிசு பிறந்தது தெரியக் கூடாது என அங்கு பிறந்த சிசுவை கைவிட்டுவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் குழந்தையை கைவிட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது குழந்தை காணாமல் பேயுள்ளதாகலும் சிசு பிறந்து பின் இறந்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்  
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் கல்லுவாடியில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் நாய் ஒன்று இறந்த சிசு ஒன்றின் உடலை இழுத்துச் செல்வதை கண்டு கிராம உத்தியோகத்ததருக்கு தகவல் வழங்கிய தையடுத்து குறித்த சிசுவின் தலை பகுதியை கொண்ட  உடலை பொலிசார் மீட்டதுடன்  குழந்தையை பிரசுவித்த பெண்னை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

பிறந்ததின, திருமண, மற்றும் மரண அறிவித்தல்களை இலவசமாக எமது இணையத்தில் பிரசுரிக்கவுள்ளோம். பிரசுரிக்க விரும்புவர்கள் தங்கள் அறிவித்தல்களை info@kilakkunews.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.

Pages